Advertisement

மேற்கு வங்காளத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

By: vaithegi Fri, 07 July 2023 12:34:01 PM

மேற்கு வங்காளத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

மேற்கு வங்காளம்: மேற்கு வங்காளம் மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு மாநில அரசு ஜூலை 8 ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ளூர் விடுமுறை ... மேற்கு வங்காளம் மாநிலத்தில் தற்போது வன்முறை வெடித்து உள்ள சூழ்நிலையில் வருகிற ஜூலை 8 ஆம் தேதி அதாவது நாளை மாநிலம் முழுவதும் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற இருக்கிறது.

இத்தேர்தல் மாநிலம் முழுவதும் 22 மாவட்டங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் தேர்தலில் மக்கள் வாக்களிக்க ஏதுவாக அனைத்து அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

local holiday,west bengal ,உள்ளூர் விடுமுறை,மேற்கு வங்காளம்

அதே போன்று அன்றைய தினம் அரசு நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள், வணிக மற்றும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அனைத்து நிறுவனங்களும் அன்றைய தினம் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை விட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tags :