Advertisement

தமிழகத்தில் நாளை பொது விடுமுறை

By: vaithegi Sun, 30 Apr 2023 2:52:53 PM

தமிழகத்தில் நாளை பொது விடுமுறை

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் மே 1 உழைப்பாளர் தினம் அன்று பொது விடுமுறைக்கான அறிவிப்பு வெளியீடு ....

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களுக்கு பொது விடுமுறை நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் இது தவிர வார இறுதி நாட்கள், சிறப்பு விடுமுறை, உள்ளூர் விடுமுறை நாட்களிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதனை அடுத்து ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும், நடப்பு ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்களுக்கான பட்டியலை அரசு வெளியிட்டு கொண்டு வருகிறது.

public holiday,labor day ,பொது விடுமுறை, உழைப்பாளர் தினம்

இந்த நிலையில், நாளை உழைப்பாளர் தினம் ஆகும். உழைப்பாளர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் அன்றைய தினம் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

பொது விடுமுறையானது 1881-ம் ஆண்டின் பேச்சுவார்த்தைக்குரிய சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில் நாளை அரசு மற்றும் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை நாள் என அறிவிக்கப்படுகின்றது.

Tags :