Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்

அரசு கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்

By: vaithegi Thu, 18 May 2023 3:28:43 PM

அரசு கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க  நாளை இறுதி நாள்


சென்னை: தமிழகத்தில் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு இளநிலை படிப்புகளில் 1 லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இதையடுத்து இந்த இடங்களை நிரப்ப மாணவர் சேர்க்கைக்கான இணைய விண்ணப்பப் பதிவு கடந்த 8-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினமே 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.

மாணவர்கள் கல்லூரிகளில் சேர ஏதுவாக தற்போது பள்ளிகளில் மாதிரி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கொண்டு வருகின்றன. எனவே இதனையொட்டி மாணவர்கள் பலர் ஆர்வமுடன் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து கொண்டு வருகின்றனர். இதுவரை மட்டும் 2 லட்சத்து 37,985 மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். அதில் 1 லட்சத்து 85,009 பேர் விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர்.

admission,govt arts college ,மாணவர் சேர்க்கை,அரசு கலை கல்லூரி

இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. எனவே, விருப்பமுள்ள மாணவர்கள் http://www.tngasa.in/ எனும் இணையதளம் வழியாக விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வருகிற மே 23-ம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்பின் சேர்க்கை கலந்தாய்வு (கல்லூரி அளவில்) வருகிற மே 25 முதல் ஜூன் 20-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறும் எனவும், தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22-ம் தேதி முதல் தொடங்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :