Advertisement

வருமான வரி தாக்கல் செய்ய நாளையே (ஜூலை 31) கடைசி நாள்

By: vaithegi Sat, 30 July 2022 2:15:38 PM

வருமான வரி தாக்கல் செய்ய நாளையே (ஜூலை 31) கடைசி நாள்

இந்தியா : வருடத்துக்கு ஒருமுறை, மாத ஊதியம் பெறுவோரும், தொழில் முனைவோரும் வருமான வரி விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பது வழக்கமான விதிமுறையாகும். 2021-22 நிதியாண்டு அல்லது 2022-23 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு (ஐ டி ஆர்) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், வரியை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என்று வருமான வரித்துறை ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

மேலும் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கும் மேல் பெறும், யாராக இருந்தாலும், வரிக்கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதிலும், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரையிலான வருமான வரிக்கணக்கிற்கு, கூடுதல் வரி எதுவும் இல்லை.

income tax,filing,last date ,வருமான வரி,தாக்கல் ,கடைசி நாள்

ஆனால் அதே ரூ.5 லட்சத்துக்கு மேல் அதிகமான வருமானம் இருந்தால் வரி விதிக்கப்பட்டு வருகிறது. முன்கூட்டியே வருமான வரி தாக்கல் செய்து விட்டால், அவருக்கு அரசு சலுகைகளையும் வழங்கி கொண்டு வருகிறது. இதையடுத்து கொரோனா தொற்று காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த ஆண்டு வருமான வரி செலுத்த டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

மேலும் கடந்த 2 வருடங்களை போல இந்த ஆண்டு கூடுதல் கால அவகாசம் எதுவும் வழங்கப்படாது என்று மத்திய அரசு தற்போது திட்டவட்டமாக சொல்லிவிட்டது. அந்த வகையில், 2021 – 2022ம் நிதி ஆண்டுக்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. மேலும் கடைசி நாளான நாளைக்குள் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய தவறினால், தாமத கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags :
|