Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை (அக்.10) நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு

நாளை (அக்.10) நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு

By: vaithegi Sat, 08 Oct 2022 8:11:44 PM

நாளை (அக்.10) நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி : கனமழைக்கு வாய்ப்பு ... தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனையடுத்து அனைத்து பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு வருகிறது.

இதையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக திருப்பத்தூர்,கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

heavy rain,nilgiris ,கனமழை,நீலகிரி

இன்று வெளியான வானிலை அறிக்கையின் படி நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அம்மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து நாளை ராணிப்பேட்டை, நீலகிரி, நாமக்கல்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்சி, சேலம் ஈரோடு, வேலூர்‌, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம்‌ உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் அடுத்து வரும் 4 நாட்களுக்கு அதாவது 12ம் தேதி வரை மழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :