Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதி நவீன தொழில்நுட்பத்தை அமைத்தது ரொறன்ரோ விமான நிலையம்

அதி நவீன தொழில்நுட்பத்தை அமைத்தது ரொறன்ரோ விமான நிலையம்

By: Nagaraj Thu, 03 Nov 2022 11:35:10 AM

அதி நவீன தொழில்நுட்பத்தை அமைத்தது ரொறன்ரோ விமான நிலையம்

கனடா: ரொறன்ரோ விமான நிலையத்தில் அதி நவீன தொழில்நுட்பம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

விமான நிலையத்தின் பாதுகாப்பு பிரிவினால் இந்த அதிநவீன தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பிரிவிற்குள் நுழையும் போது ஆயுதங்கள் கண்டறியக்கூடிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

லிபர்ட்டி டிபன்ஸ் என்னும் நிறுவனத்தினால் இந்தப் பாதுகாப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பு ஆயுதங்களை கண்டறியக்கூடிய ஸ்கேனர் வசதிகளை கொண்டு அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவில் இந்த வகை தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் முதல் சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் தடவையாக பியர்சன் விமான நிலையத்தில் இந்த அதிநவீன தொழில்நுட்பம் பரீட்சிக்கப்பட உள்ளது.

ஹக்ஸ் வேவ் எனப்படும் ஓர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முப்பரிமான ராடகர்களைக் கொண்டு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தொழில்நுட்பமானது இரும்பு மற்றும் இரும்பு அல்லாத ஆயுதங்களையும் ஏனைய வெடிபொருள் அச்சுறுத்தல்களையும் கண்டறியக்கூடிய வசதியைக் கொண்ட அமைந்தது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த பாதுகாப்பு கட்டமைப்பிற்குள் பிரவேசிப்பவர்கள் வழமை போன்று தங்களுடைய ஆடைகளை கழற்றவோ அல்லது தம்மிடம் இருக்கும் பொருட்களை ஒப்படைக்கவோ தேவையில்லை. இந்த புதிய தொழில்நுட்பம் வானொலி அலைகளை பயன்படுத்தி ஊடறுத்து ஆயுதங்களை கண்டறிகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|