வரும் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம்
By: Nagaraj Sat, 17 June 2023 8:03:52 PM
புதுடில்லி: 20ம் தேதி பயணம்... அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி வரும் 20ந் தேதி முதல் 25ந் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
21ம் தேதி ஐநா.சபை தலைமையகத்தில் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களில் கலந்துக் கொள்ளும் மோடி, 22ம் தேதி வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்துவதுடன், தொழிலதிபர்கள், முன்னணி நிறுவனங்களின் சிஇஓக்கள், இந்திய வம்சாவளியினரை சந்திக்க உள்ளார்.
24ம் தேதி எகிப்து செல்லும் மோடி அந்நாட்டு அதிபர் Abdel Fattah El-Sis உடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
Tags :
egypt |