Advertisement

ஐந்தருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

By: vaithegi Sat, 06 Aug 2022 7:05:52 PM

ஐந்தருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தமிழகம் : தமிழகத்தில் மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த மே மாதத்தில் இருந்து கனமழை பெய்து கொண்டு வருகிறது. இந்த தொடர் கனமழையால் நீர்நிலைகள் முழுமையாக நிரம்பி வருகின்றன. அதாவது மேட்டூர் மற்றும் அமராவதி அணையிலிருந்து அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை பணிகள் மிக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பு பணியின் ஒருபகுதியாக அனைத்து மாவட்டங்களிலும் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நலன் கருதி தென்காசியில் ஐந்தருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மற்ற மாவட்டங்களை தொடர்ந்து திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் இன்று காலை வரை அதிகபட்சமாக கடனாநதி பகுதியில் 12 மி.மீ, குண்டாறு பகுதியில் 9மி.மீ மழை பதிவாகி உள்ளது. இந்த மழையினால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதனால் வினாடிக்கு 2803.94 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

aindaruvi,tourism,permission ,ஐந்தருவி,சுற்றுலா ,அனுமதி

அதனால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த காரணத்தால் மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடந்த 5 நாட்களாகவே சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

ஆனால் தற்போது மழை குறைந்துள்ளதால் மீண்டும் ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி ஆகிய 4 அருவிகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் வருகை உயர்ந்துள்ளது.

Tags :