Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்தது ... சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்தது ... சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

By: vaithegi Fri, 03 Nov 2023 1:23:25 PM

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்தது   ...  சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

குற்றாலம் : இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

எனவே இதன்காரணமாக தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. தொடர் மழையினால் நீர்வரத்து அதிகரிப்பால் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

tourists,vellaperukku,kutalam ,சுற்றுலா பயணிகள் ,வெள்ளப்பெருக்கு ,குற்றாலம்

இதனை அடுத்து நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே இதன் காரணமாக நேற்று குற்றால அருவிகளில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

இந்த நிலையில் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்த நிலையில், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

Tags :