Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தண்டவாள பராமரிப்பு பணி .. சேலம்-கோவை பயணிகள் ரெயில் ரத்து

தண்டவாள பராமரிப்பு பணி .. சேலம்-கோவை பயணிகள் ரெயில் ரத்து

By: vaithegi Thu, 13 Oct 2022 07:12:26 AM

தண்டவாள பராமரிப்பு பணி  ..   சேலம்-கோவை பயணிகள் ரெயில் ரத்து

சென்னை: பயணிகள் ரெயில் ரத்து ... தற்போது தமிழகத்தில் தீபாவளி பண்டிகையானது வருகிற 24ம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது. அதனால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவார்கள்.அதனால் பொது மக்களின் பாதுகாப்பு நலன் கருதி தமிழகம் முழுவதும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இதனை அடுத்து இந்த நிலையில் ரயில்வே துறையானது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது, கோவை – திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. அதனால் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

rail,track maintenance work,cancelled ,ரெயில் ,தண்டவாள பராமரிப்பு பணி  ,ரத்து

இந்த வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற தினங்களில் இயங்கி கொண்டிருந்த சேலம் – கோவை பாசஞ்சர் ரயில் (06802) மற்றும் கோவை- சேலம் பாசஞ்சர் ஆகிய இரு ரயில்களும் இன்று முதல் வருகிற 30ம் தேதி வரை என 18 நாட்களுக்கு முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த அறிவிப்பு அங்குள்ள பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்காக ரயில்வே நிர்வாகம் இந்த ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.

Tags :
|