Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தெலங்கானாவில் வெளுத்தெடுத்த மழையால் போக்குவரத்து பாதிப்பு

தெலங்கானாவில் வெளுத்தெடுத்த மழையால் போக்குவரத்து பாதிப்பு

By: Nagaraj Thu, 17 Sept 2020 09:49:14 AM

தெலங்கானாவில் வெளுத்தெடுத்த மழையால் போக்குவரத்து பாதிப்பு

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு... தெலங்கானாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, மாநிலத்தின் பல பகுதிகளில் சாலைகளிலேயே மழைநீர் வெள்ளம் என பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து இயக்கத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

ஹைதராபாத்தில் தொலி சவுக்கி பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த, ஏராளமான இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் போன்ற வாகனங்கள் மழை நீரில் மூழ்கின.

merchants,wildlife,rainwater,vehicles ,வியாபாரிகள், இயல்பு வாழ்க்கை, மழைநீர், வாகனங்கள்

குகட்பல்லி பகுதியில் சாலையில் மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதேபோல், கிருஷ்ணாநகர் குடியிருப்பு பகுதியில் முழங்கால் அளவிற்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தற்போதுதான் மெதுவாக இயல்பு நிலை திரும்பி வந்து கொண்டு இருக்கிறது. அலுவலகம் செல்வோர், வியாபாரிகள் என்று அனைவரும் தற்போது பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்நிலையில் வெளுத்து எடுக்கும் மழையால் வியாபாரிகள் வெகுவாக பாதிப்பை சந்திக்கும் நிலை உருவாகி உள்ளது.

Tags :