Advertisement

சென்னையில் இங்கு போக்குவரத்து மாற்றம்

By: vaithegi Fri, 04 Aug 2023 09:45:21 AM

சென்னையில் இங்கு போக்குவரத்து மாற்றம்

சென்னை: தந்திர தினவிழா ஒத்திகை காரணமாக போக்குவரத்து மாற்றம் ... 76 -ஆவது சுதந்திர தின நாளையொட்டி தமிழ்நாட்டில் சுதந்திர தின நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடைபெற்று கொண்டு வருகிறது. மொத்தம் 3 நாட்கள் ஒத்திகை நடைபெறும் உள்ள நிலையில், இன்று முதல் ஒத்திகை தொடங்கி உள்ளது.

இதையடுத்து இந்த ஒத்திகையானது வருகிற 10 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும். கமாண்டோ படை, குதிரைப்படை ,பெண் காவல் படை உள்ளிட்ட ஏழு படை பிரிவுகளை சேர்ந்த வீரர் , வீராங்கனைகள் இந்த அணி வகுப்பில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

transport,chennai ,போக்குவரத்து ,சென்னை

வருகிற 10 மற்றும் 13 ஆகிய தினங்களில் நடைபெறும் ஒத்திகையின் போது விருது வழங்கும் நிகழ்ச்சிகளின் ஒத்திகை நடைபெறுகிறது. ஒத்திகை நடைபெறும்நாட்களில் காலை 6 மணி முதல் ராஜாஜி சாலையிலும் , காமராஜர் சாலையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் நேப்பியர் பாலத்தில் இருந்து போர் நினைவுச் சின்னம் வரை காமராஜர் சாலையிலும், போர் நினைவு சின்னத்தில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமையப்பெற்ற ராஜாஜி சாலையிலும், கொடிமர சாலையிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.

Tags :