Advertisement

சென்னையில் இங்கு போக்குவரத்து மாற்றம்

By: vaithegi Sun, 27 Aug 2023 4:13:57 PM

சென்னையில் இங்கு போக்குவரத்து மாற்றம்

சென்னை: அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டுப் பெருவிழா நடைபெறவுள்ளதையொட்டி, அடையாறு உட்கோட்ட பகுதியில் போக்குவரத்து மாற்றம் ..இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டுப் பெருவிழா-2023, வருகிற 29.08.2023 செவ்வாய்க்கிழமை அன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி 08.09.2023 தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது. 29.08.2023 அன்று மாலை 04.30 மணிக்கு கொடிதேர்பவனி ஆலயத்திலிருந்து புறப்பட்டு 6வது அவென்யு, 3வது பிரதான சாலை, 7வது அவென்யு வழியாக சென்று திரும்பி மீண்டும் ஆலயத்துக்கும், 01.09.2023 அன்று மாலை 04.30 மணிக்கு இளைஞர் ஊர்வலம் ஆலயத்திலிருந்து புறப்பட்டு 6வது அவென்யு வழியாக சென்று திரும்பி மீண்டும் ஆலயத்துக்கும்,

இதனை அடுத்து வருகிற 02.09.2023 அன்று மாலை 07.30 மணிக்கு தேர்பவனி ஆலயத்திலிருந்து புறப்பட்டு 6வது அவென்யு வழியாக சென்று திரும்பி மீண்டும் ஆலயத்துக்கும், 03.09.2023 அன்று மாலை 07.30 மணிக்கு நற்கருணை ஊர்வலம் ஆலயத்திலிருந்து புறப்பட்டு 6வது அவென்யு வழியாக சென்று திரும்பி மீண்டும் ஆலயத்துக்கும், 07.09.2023 அன்று மாலை 07.30 மணிக்கு பிரம்மாண்ட தேர்பவனி ஆலயத்திலிருந்து புறப்பட்டு 6வது அவென்யு, 4வது பிரதான சாலை, 2வது அவென்யு, 3வது அவென்யு, 7வது அவென்யு வழியாக சென்று திரும்பி மீண்டும் ஆலயம் வரை நடைபெற உள்ளதை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையால் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

traffic change,annai velankanni trithala golden jubilee festival ,போக்குவரத்து மாற்றம்,அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டுப் பெருவிழா

அடையாறு உட்கோட்ட மாற்று வழிகள்
1. திரு.வி.க. பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் வழக்கம் போன்று செல்லும். மக்கள் கூட்டம் அதிகமாகவும் வாகனங்கள் செல்ல முடியாதவாறு நெருக்கடியாக இருக்கும் போது 3வது அவன்யூ & 2வது அவன்யூ நோக்கி அனைத்து உள்வரும் வாகனங்களும் டாக்டர் முத்துலட்சுமி பார்க்கில் (எம்எல் பார்க்)-திரும்பி- LB சாலை- எம்ஜி சாலை வழியாக அனுப்பப்படும்.

2. எம்ஜி சாலையில் அதிகமாக வாகனங்கள் செல்ல முடியாதவாறு நெருக்கடியாக இருக்கும் போது பெசன்ட் நகர் 1வது பிரதான சாலை- சாஸ்திரி நகர் பேருந்து நிலையம்- 2வது அவன்யூ வழியாக திருப்பி விடப்படும்.

வாகனம் நிறுத்துமிடங்கள்
1. ஆல்காட் நினைவு மேல்நிலைப்பள்ளி.
2. அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி.
3. பெசன்ட் நகர் 2வது பிரதான சாலை
4. பெசன்ட் நகர் 4வது அவென்யு
5. பெசன்ட் நகர் 17வது குறுக்குத் தெரு
வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags :