Advertisement

சென்னையில் இங்கு நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

By: vaithegi Fri, 27 Jan 2023 09:44:05 AM

சென்னையில் இங்கு நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை : நாளை முதல் 9 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் .... சென்னை தியாகராய நகர் தெற்கு உஸ்மான் மேம்பாலத்திலிருந்து சென்னை அண்ணா சாலை சிஐடி1-வது மெயின் ரோடு வரை மேம்பாலம் கட்டும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொள்ள இருக்கிறது. எனவே இதன் காரணமாக நாளை முதல் 9 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இது பற்றி போக்குவரத்து காவல்துறையினர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தில் இருந்து தெற்குஉஸ்மான் சாலை வழியாக அண்ணா சாலை சிஐடி 1-வதுமெயின் ரோடு செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, கண்ணம்மா பேட்டை சந்திப்பு,தெற்கு மேற்கு போக்கு சாலை,மூப்பராயன் தெரு, இணைப்பு சாலை வந்து அண்ணா சாலையை அடையலாம்.

transport change,chennai,t. nagar ,போக்குவரத்து மாற்றம் , சென்னை,தி.நகர்

மேலும் தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தில் இருந்து வரும் மாநகர பேருந்துகள், தெற்கு உஸ்மான் சாலை வழியாக செல்ல தடை செய்யப்பட்டு, மேட்லி சந்திப்பு, பர்கிட் சாலை, மூப்பராயன் தெரு, இணைப்பு சாலை வந்து அண்ணா சாலையை அடையலாம்.

அதைத்தொடர்ந்து அரங்கநாதன் சுரங்கப்பாதையில் இருந்துதெற்கு உஸ்மான் சாலை வழியாகஅண்ணா சாலை சிஐடி 1-வது மெயின் ரோடு செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, மேற்கு சிஐடி நகர் வடக்கு தெரு வழியாக வந்து அண்ணா சாலையை அடையலாம். அண்ணா சாலை சிஐடி1-வது மெயின் ரோடு சந்திப்பில் இருந்து தெற்கு உஸ்மான் சாலைவழியாக தி.நகர் பேருந்து முனையத்துக்கு செல்லும் வாகனங்கள், வழக்கம் போல செல்லலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :