Advertisement

அமைதி பேரணி ... சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

By: vaithegi Mon, 07 Aug 2023 09:57:28 AM

அமைதி பேரணி ... சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை ஓட்டி முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் “அமைதிப் பேரணி”, இன்று காலை 8.00 மணிக்கு சென்னை, அண்ணா சாலை,

ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்து உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலை அருகில் இருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்து உள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

அந்த வகையில் இன்று காலை 8 மணி அளவில் போர் நினைவு சின்னத்தில் இருந்து நேப்பியர் பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் சாலை செல்ல அனுமதிக்காமல் கொடிமர சாலை வழியாக திருப்பி விடப்படும்.

transport change,chennai ,போக்குவரத்து மாற்றம் ,சென்னை

இதையடுத்து காந்தி சிலையில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் கண்ணகி சிலை வரை அனுமதிக்கப்பட்டு, பாரதி சாலை வழியாக திருப்பி விடப்படும். வாலாஜா சாலைக்கு வரும்போது வாகனங்கள் அண்ணா சிலையிலிருந்து பெரியார் சிலை நோக்கி திருப்பி விடப்படும்.

எனவே வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் பயணம் மேற்கொள்ள போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

Tags :