Advertisement

சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

By: vaithegi Thu, 20 Apr 2023 12:53:22 PM

சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்



சென்னை: சென்னையில் கழிவுநீர் வடிகால் வாரியம் சார்பில் பல பகுதிகளில் கழிவுநீர் அகற்றும் பணி நடைபெற இருப்பதால் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் ... சென்னையில் மக்கள் தொகை அதிகம் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. அதுவும் காலை மற்றும் இரவு வேலைகளில் அலுவலகம் மற்றும் கல்வி நிலையங்களிலிருந்து செல்லும் மக்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும் மெட்ரோ உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கோள்ளப்படுவதும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருக்கிறது.

இந்த நிலையில் சென்னை பெருநகர காவல்துறையினர் போக்குவரத்து பிரிவு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதையடுத்து அதன் படி கழிவுநீர் வடிகால் வாரியம் சார்பில் மணப்பாக்கம், கிருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் அகற்றும் பணி நடைபெற இருக்கிறது. அதன் காரணமாக இன்று முதல் மே 15 -ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாகவும் போக்குவரத்து பிரிவு அறிவித்துள்ளது.

transport change,chennai ,போக்குவரத்து மாற்றம் ,சென்னை

அதன்படி, குன்றத்தூர், முகலிவாக்கத்தில் இருந்து மவுண்ட் பூந்தமல்லி சாலை வழியாக கிண்டி செல்பவர்கள், முகலிவாக்கம் பிரதான சாலையில் இடதுபுறம் திரும்பி குமுதம் பிரதான சாலை, சபரி நகர், முகலிவாக்கம் பிரதான சாலை வழியாக மவுண்ட் பூந்தமல்லி சாலையை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பம்மல், கிருகம்பாக்கத்தில் இருந்து மவுண்ட் பூந்தமல்லி சாலை வழியாக கிண்டி செல்லும் வாகனங்கள், மணப்பாக்கம் பிரதான சாலையில் இடதுபுறம் திரும்பவும். பின்னர், குமுதம் பிரதான சாலையில் வலதுபுறம் திரும்பி, சபரிநகர், முகலிவாக்கம் பிரதான சாலை வழியாக மவுண்ட் பூந்தமல்லி சாலை செல்லலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.’

Tags :