Advertisement

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

By: vaithegi Fri, 15 Sept 2023 1:16:09 PM

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

சென்னை : சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காலை 08.00 மணி முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் ஈ.வே.ரா சாலை, இராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம். மாலை 03.00 மணி முதல் ஊர்வலம் பேசின் பிரிட்ஜ்-யை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் பேசின் பிரிஜ் சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை அல்லது இராஜாஜி சாலையை பயன்படுத்தலாம். மேலும், ஈ.வே.ரா சாலை, முத்துசாமி சாலை மற்றும் இராஜாஜி சாலைகளை பயன்படுத்தலாம். ஊர்வலம் மூலகொத்தளம் பகுதியை அடைந்த உடன் பேசின் பிரிட்ஜ்-ல் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. ஓட்டிகள் இராஜாஜி சாலை, ஈ.வே.ரா டாக்டர்.அம்பேத்கர் காலேஜ் சாலை ஆகிய சாலைகளை பயன்படுத்தலாம்.

இதனை அடுத்து திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் பேசின் பாலம் சாலையில் வரும்போது சூளை ரவுண்டானவிலிருந்து டெமலஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் இராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் ராஜா முத்தையா வரும்போது மசூதி பாயின்டிலிருந்து சூளை சாலையில் ரவுண்டான நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும்போது நாரயணாகுரு சாலை ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பில் இருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

transport change,chennai ,போக்குவரத்து மாற்றம்,சென்னை

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் அவதான பாப்பையா சாலை வரும்போது பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதிய இல்லை. அத்தகைய வாகனங்கள் பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக செல்லலாம். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வரும்போது டவ்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் நாரயண குரு சாலை வழியாக செல்லலாம். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் ஒட்டேரி சந்திப்பை அடையும் போது மில்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஒட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் ஒட்டேரி சந்திப்பில் வரும்போது கொன்னூர் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து ஒட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாக செல்லலாம். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் அடையும் போது ஒட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னூர் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகனங்கள் ஒட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையில் இருந்து வி.பி காலணி (தெற்கு) தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாக செல்லலாம், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :