Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஒட்டி வரும் 23, 24ம் தேதி போக்குவரத்து மாற்றம்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஒட்டி வரும் 23, 24ம் தேதி போக்குவரத்து மாற்றம்

By: Nagaraj Sun, 21 May 2023 07:04:40 AM

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஒட்டி வரும் 23, 24ம் தேதி போக்குவரத்து மாற்றம்

சென்னை: போக்குவரத்து மாற்றம்... ஐபிஎல் கிரிக்கெட் போட்டியையொட்டி, சேப்பாக்கத்தில் 2 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் வரும் மே 23,24 -இல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இந்த நாள்களில் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. போட்டி முடிவடைவதற்கு அரை மணி நேரத்துக்கு முன் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.

இதன்படி, போா்நினைவிடத்தில் இருந்து வெளிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வாலாஜா சந்திப்பு, கொடிமரச் சாலைவழியாக இலக்கை அடையலாம்.

transport,modification,storage,vehicles,ipl,competition ,போக்குவரத்து, மாற்றம், சேப்பாக்கம், வாகனங்கள், ஐபிஎல், போட்டி

காந்தி சிலையில் இருந்து உழைப்பாளா் சிலை நோக்கி உள் வரும் வாகனங்கள் அனைத்தும், காந்தி சிலை அருகே திருப்பிவிடப்பட்டு ஆா்.கே.சாலை வழியாகச் சென்று இலக்கைஅடையலாம்.

இதேபோல தொழிலாளா் சிலையில் இருந்து வாகனங்கள் வாலாஜா சாலையை நோக்கி செல்ல அனுமதி கிடையாது. அந்த வாகனங்கள், கண்ணகி சிலையை நோக்கி திருப்பி விடப்படும். அண்ணா சிலை அருகே, வாகனங்கள் வாலாஜா சாலையை நோக்கி செல்ல அனுமதி கிடையாது. இந்த வாகனங்கள், வெலிங்டன் சந்திப்பு, பெரியாா் சிலை நோக்கி திருப்பிவிடப்படும்.

பாரதிசாலை, பெல்ஸ் சாலைசந்திப்பில் இருந்து வாகனங்கள் பெல்ஸ் சாலையை நோக்கிச் செல்ல அனுமதி கிடையாது. இந்த வாகனங்கள் கண்ணகி சிலை அல்லது ரத்னா கஃபே சந்திப்புவழியாக திருப்பி விடப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Tags :
|