Advertisement

கோவையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

By: vaithegi Fri, 17 Feb 2023 4:02:00 PM

கோவையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

கோவை:போக்குவரத்து மாற்றம் ... நாளை இரவு கோவை ஈஷா மையத்தில் மஹாசிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கவிருப்பதால் அவினாசி சாலை, பழைய மேம்பாலம், கூட் ஜெட் ரோடு, புரூக்பீல்டு ரோடு, சிந்தாமணி சந்திப்பு, கௌலிபிரவுன் ரோடு, லாலிரோடு மற்றும் மருதமலை ரோடு உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.

எனவே அதன்படி கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, வரும் 18,02.2023 & 19.02.2023-ம் தேதிகளில் இந்திய குடியரசு தலைவர் அவர்களின் வருகையை முன்னிட்டு, பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்படாத வகையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சூழ்நிலைக்கேற்ப கோவை மாநகரில், மேற்குறிப்பிட்ட பகுதிகளில் கீழ்க்கண்டவாறு, சிறியளவில் போக்குவரத்தில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி 18.02.2023 மதியம் 01.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை மற்றும்19.02.2023 காலை 06.00 மணிமுதல் 10.00 மணிவரை,கனரக /சரக்கு வாகனங்கள் 1 அலிநாசியிலிருந்து, கோவை நகருக்குள், நீலாம்பூர், சின்னியம்பாளையம் வழியாக வரும் கனரக/சரக்கு வாகனங்கள் தடைசெய்யப்படுகிறது. மாற்றாக, கோவை நகருக்குள் வரும் கனரக/சரக்கு வாகனங்கள், L&T பைபாஸ் ரோடு, சிந்தாமணிப்புதூர், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், ராமநாதபுரம் வழியாக நகருக்குள் வரலாம்.

(2) கோவை நகரிலிருந்து, அவிநாசிக்கு செல்லும் கனரக/சரக்கு வாகனங்கள் அண்ணாசிலை, ரேஸ்கோர்ஸ், கங்கம், சிங்காநல்லூர், L&T பைபாஸ்ரோடு வழியாக செல்லலாம். (3) காளப்பட்டிரோடு வழியாக, நகருக்கு வெளியே செல்லும் கனரக/சரக்கு வாகனங்கள், விமானநிலைய சந்திப்பை அடைய தடைசெய்யப்படுகிறது. மாற்றாக, காளப்பட்டி நால்ரோடு, மயிலம்பட்டி, தொட்டிபாளையம் வழியாக செல்லலாம்.

(4) சத்திரோடு, சரவணம்பட்டி பகுதிகளிலிருந்து, அவிநாசி சாலை / திருச்சி சாலைக்கு செல்லும் கனரக/சாக்கு வாகனங்கள் கணபதி, காந்திபுரம் மேம்பாலம், அண்ணாசிலை, ரேஎஸ்கோர்ஸ், சுங்கம், சிங்காநல்லூர் வழியாக செல்லலாம். 5) மருதமலை ரோடு, தடாகம் ரோடு வழியாக வரும் வாகனங்கள் கௌலிபிரவுன் ரோடு, சிந்தாமணி வழியாக செல்வது தடை செய்யப்படுகிறது. மாற்றாக, GCT, பாரதி பார்க் சாலை, வடகோவை மேம்பாலம், காந்திபுரம், அண்ணாசிலை, ரேஸ்கோர்ஸ், சுங்கம், சிங்காநல்லூர் வழியாக செல்லலாம். (6) மேட்டுப்பாளையம் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள், வடகோவை மேம்பாலம், காந்திபுரம், அண்ணாசிலை, ரேஸ்கோர்ஸ், கங்கம், சிங்காநல்லூர் வழியாக செல்லலாம்.

transport,coimbatore ,போக்குவரத்து ,கோவை

இதையடுத்து 2. கார் / இதர வாகனங்கள்: (1) பொதுமக்கள், கோவை நகருக்குள் அவினாசி சாலை, பழைய மேம்பாலம், கூட் ஜெட் ரோடு, புரூக்பீல்டு ரோடு, சிந்தாமணி சந்திப்பு, கௌலிபிரவுன் ரோடு, லாலிரோடு மற்றும் மருதமலை ரோடு ஆகிய பகுதிகளில், மேற்குறிப்பிட்ட நேரங்களில் செல்ல வேண்டியிருந்தால், தங்களது பயணத்தை மாற்றி திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. (2) அவிநாசி சாலை, சின்னியம்பாளையம் வழியாக, கோவை நகருக்குள் வரும் கார்/இதா வாகனங்கள், தொட்டிபாளையம் பிரிவு, மயிலம்பட்டி, காளப்பட்டி நால்ரோடு, சரவணம்பட்டி வழியாக செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விமானநிலையம், ரயில்நிலையம், மருத்துவமனைகளுக்கு செல்லும் வாகனங்கள் மட்டுமே, தொட்டிபாளையம் பிரிவிலிருந்து நகருக்குள் அனுமதிக்கப்படும்.

(3) திருச்சி சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், அவினாசி சாலையை தவிர்த்து, சிங்காநல்லூர் வழியாக தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம். (4) அவிநாசி ரோடு, பழைய மேம்பாலத்தை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மேற்குறிப்பிட்ட நேரங்களில், மேம்பாலத்தின் கீழே செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. (5) மருதமலை ரோடு, தடாகம் ரோடு - வழியாக வரும் வாகனங்கள் GCT, பாரதி பார்க் சாலை, வடகோவை மேம்பாலம், காந்திபுரம் வழியாக செல்லலாம்.(6) மேட்டுப்பாளையம் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் வடகோவை மேம்பாலம், காந்திபுரம் வழியாக செல்லலாம்.

இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஏற்ப, பொதுமக்கள் தங்களது பயணத்தை திட்டமிட்டு, ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது என அந்த செய்தி குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :