Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக 11 மாநிலங்களில் போக்குவரத்து முடக்கம்

நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக 11 மாநிலங்களில் போக்குவரத்து முடக்கம்

By: Karunakaran Tue, 08 Dec 2020 2:14:54 PM

நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக 11 மாநிலங்களில் போக்குவரத்து முடக்கம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே இதுவரை நடந்த 5 சுற்று பேச்சு வார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டம் இன்று 13-வது நாளாக நீடித்தது.

இந்தநிலையில் புதிய திட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் இன்று “பாரத் பந்த்” என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தி.மு.க., தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, பகுஜன் சமாஜ், சிவசேனா, ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாடி உள்பட 24 கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. மேலும் 10 மத்திய தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவித்து உள்ளன.

traffic freeze,11 states,full blockade protest,farmers ,போக்குவரத்து முடக்கம், 11 மாநிலங்கள், முழு முற்றுகை எதிர்ப்பு, விவசாயிகள்

மேலும் வங்கி ஊழியர்கள், அகில இந்திய ரெயில்வே பணியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் இந்திய ரெயில்வே பணியாளர்கள் தேசிய கூட்டமைப்பு ஆகிய 2 ரெயில்வே சங்கங்கள், மாநில அரசு ஊழியர் சங்கங்கள், மாணவர்கள், பெண்கள் அமைப்புகள், விவசாய அமைப்புகள் இன்று நடத்தும் “பாரத் பந்த்” போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன. இன்று காலை விவசாயிகள் அறிவித்தப்படி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், கேரளா, ஜார்க்கண்ட், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், சத்தீஷ்கர் மற்றும் புதுச்சேரி ஆகிய 11 மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம் முழுமையாக இருந்தது. பெரும்பாலான மாநிலங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. வாகன போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. இதனால் நாடு முழுவதும் 9, 19, 24, 44 மற்றும் 48 எண்கள் கொண்ட தேசிய நெடுஞ்சாலைகள் வெறிச் சோடி காணப்பட்டன.

Tags :