Advertisement

நேற்று ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசல்

By: vaithegi Sun, 23 Oct 2022 12:52:42 PM

நேற்று ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசல்

ஈரோடு : தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளதால், பொதுமக்கள் புத்தாடைகள், பட்டாசுகளை வாங்கி செல்கிறார்கள். இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டதால், தீபாவளி கொண்டாடத்துக்கு தேவையான ஜவுளிகளை வாங்குவதற்காக கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

ஈரோடு மாநகரிலும் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் மிக அலைமோதியது. ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்த மக்களும் ஜவுளி வாங்க ஈரோட்டில் குவிந்தார்கள். அவர்கள் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் வந்ததால் மாநகரில் வாகன போக்குவரத்து அதிகரித்தது.

erode traffic jam ,ஈரோடு  போக்குவரத்து நெரிசல்

அதிலும் குறிப்பாக கடைவீதிகளுக்கு செல்லும் வழியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி மிக கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், ஈரோடு மேட்டூர்ரோடு, மீனாட்சி சுந்தரனார் சாலை (பிரப்ரோடு), சத்திரோடு, பெருந்துறைரோடு, காந்திஜிரோடு, நேதாஜிரோடு, நசியனூர்ரோடு போன்ற முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

மேலும் பன்னீர்செல்வம் பூங்கா சிக்னலிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. அங்கு சிக்னலுக்காக நீண்ட நேரமாக வாகன ஓட்டிகள் காத்திருந்தனர். கடந்த சில நாட்களை விட நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

Tags :