Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போக்குவரத்து பிரிவு போலீசார் சல்யூட் வைக்க தேவையில்லை

போக்குவரத்து பிரிவு போலீசார் சல்யூட் வைக்க தேவையில்லை

By: Nagaraj Wed, 11 Nov 2020 10:10:51 PM

போக்குவரத்து பிரிவு போலீசார் சல்யூட் வைக்க தேவையில்லை

போக்குவரத்து போலீசார் சாலைகளில் பணியாற்றும் போது உயர் அதிகாரிகளுக்கு சல்யூட் வைக்க தேவையில்லை என்று அதிரடித்துள்ளார் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா.

கர்நாடக மாநில ஐ.பி.எஸ். அதிகாரியும், மாநில உள்துறை செயலாளருமான ரூபா மீடியாக்களில் பேட்டி கொடுக்கும் போது ஏதாவது ஒரு விழிப்புணர்வு செய்தி கொடுப்பது வழக்கம். அதன்பின், போக்குவரத்து துறை டி.ஐ.ஜி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டபோது போக்குவரத்து துறையில் இளைஞர்களை அதிகளவு ஊக்குவித்தார்.


salute,traffic cops,action,jams ,சல்யூட், போக்குவரத்து போலீசார், அதிரடி, நெரிசல்கள்

இந்நிலையில் உள்துறை செயலாளர் ரூபா, போக்குவரத்து போலீசார் மக்களை காப்பாற்றுவது மட்டுமின்றி, போக்குவரத்து நெரிசல்களை சீர் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு கடமையே கதியென்று இருக்கும், போக்குவரத்து காவலர்கள் சிலர், உயர் அதிகாரிகள் சாலைகளில் வருகிறார்கள் என்றால் பதட்டம் அடைந்து விடுகின்றனர்.

உயர் அதிகாரிகளுக்கு சல்யூட் அடிக்க வேண்டுமென்ற கவனத்தில், போக்குவரத்து நெரிசல்களை சீர் செய்ய தவறி விடுகின்றனர். எனவே இனி போக்குவரத்து காவலர்கள் சாலைகளில் பணியாற்றும்போது, உயர் அதிகாரிகள் வாகனத்தில் சென்றால், அவர்களுக்கு சல்யூட் அடிக்க தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|
|