Advertisement

இந்த பகுதிகளில் வரும் 11ம் தேதி போக்குவரத்து மாற்றம்

By: vaithegi Fri, 09 Dec 2022 12:14:01 PM

இந்த பகுதிகளில் வரும் 11ம் தேதி போக்குவரத்து மாற்றம்

சென்னை: போக்குவரத்து மாற்றம் .... சென்னையில் அவ்வப்போது முக்கிய நிகழ்வுகள் பற்றி விழிப்புணர்வுக்காக மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு கொண்டு வருகிறது. இப்போட்டியில் ஏராளமானோர் கலந்து கொள்வர். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் சர்வதேச மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இதனை அடுத்து இதில் சுமார் 4,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டிகளின் போது போட்டி நடைபெறும் இடங்களில் வாகன போக்குவரத்திற்கு எதற்கும் அனுமதி இல்லை.

transport,chennai ,போக்குவரத்து ,சென்னை

போக்குவரத்து துறை சார்பாக மாற்று பாதைகள் அமைக்கப்படும். அதே போன்று வரும் 11ம் தேதி சென்னையில் மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது. சாஸ்திரி நகரில் தொடங்கி விவேகானந்தர் இல்லம் வரை இப்போட்டி நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த போட்டியானது காலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாரத்தான் போட்டியை முன்னிட்டு மயிலாப்பூர், அடையாறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags :