Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா நோயாளிகளை கண்காணித்து உதவ ரயில் பாட் ரோபோ சாதனம்

கொரோனா நோயாளிகளை கண்காணித்து உதவ ரயில் பாட் ரோபோ சாதனம்

By: Nagaraj Sun, 17 May 2020 10:29:01 AM

கொரோனா நோயாளிகளை கண்காணித்து உதவ ரயில் பாட் ரோபோ சாதனம்

ரயில்பாட் ரோபாட் சாதனம்... தெலுங்கானாவில் மத்திய தெற்கு ரயில்வே துறை குழுவினர்கள் கொரோனா பாதித்த நோயாளிகளை கண்காணித்து உதவும் வகையில் 'ரயில் பாட்' ( RAIL-BOT) என்ற ரோபோ சாதனத்தை உருவாக்கினர்.

தெலுங்கானாவில் கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களை கண்காணித்து தேவையான உதவிகளை செய்ய சுகாதார பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஐதராபாத்தில் மத்திய தெற்கு ரயில்வேயின் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ஹேம் சிங் பனோத் மற்றும் அவரது குழுவினர் இணைந்து ரயில் பாட் (ஆர் பாட்) என்ற ரோபோ சாதனத்தை உருவாக்கினர்.

train pot,80 kg load,device,patients,treatment ,ரயில் பாட், 80 கிலோ சுமை, சாதனம், நோயாளிகள், சிகிச்சை

இந்த வகை ரோபோக்கள் மருத்துவமனைகளில் உள்ள நோய் பாதித்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும். அவர்களின் உடல்நலனை கண்காணிக்கும். மேலும் இது மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற உதவி மருத்துவ ஊழியர்கள் தொற்றுநோய்களைத் தொடர்பு கொள்ளும் அபாயத்தைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள உதவும்.மத்திய ரயில்வே மருத்துவமனையான லல்லகுடாவில் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படும். இது மொபைல் வசதியுடன் வைபை மூலம் இயங்கும்.

இது நோயாளியின் உடல் வெப்பநிலையை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அல்லது மருத்துவர்களின் மொபைலுக்கு தகவல்களை அனுப்பும் வகையில் சென்சார் அடிப்படையிலான அம்சங்களை கொண்டது. வெப்பநிலை அளவீடுகளில் ஏதேனும் அசாதாரணமானால் அலாரம் மூலம் நோயின் தன்மையை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. R-BOT -ன் அம்சங்களில் பான் மற்றும் டில்ட் செயல்பாட்டைக் கொண்டது.

train pot,80 kg load,device,patients,treatment ,ரயில் பாட், 80 கிலோ சுமை, சாதனம், நோயாளிகள், சிகிச்சை

அத்துடன் நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் இடையே தகவல்கள் பரிமாற்றத்திற்காக நேரடியாக வீடியோ மற்றும் ஆடியோ, பதிவு செய்யும் வசதி, இருவழி ஆடியோ போன்ற வசதிகளுடன் 1 கி.மீ சுற்றளவில் 80 கிலோ சுமைகளுடன் செயல்படும் தன்மை கொண்டது.இந்த சாதனம் நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்வதால் சுகாதார பணியாளர்களுக்கும், சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கும் நோய் தொற்று பரவுவது தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|