Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜூன் 23யிலிருந்து ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜூன் 23யிலிருந்து ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

By: vaithegi Wed, 22 June 2022 6:01:40 PM

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜூன் 23யிலிருந்து ரயில்  டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

தமிழகம்: இந்தியாவில் பரவிய கொரோனா தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் அனைத்து துறைகளும் கடுமையான சரிவை சந்தித்தது. அந்த வகையில் மற்ற துறைகளை தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டது.

ரயில் நிலையங்களில் பயணிகள் வருகை இன்றி காணப்பட்டதால் முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. தற்போது பாதிப்புகள் குறைந்த நிலையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குறிப்பிட்ட எண்ணிக்கையில் ரயில்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியது. நேரடியாகவும் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிகள் பயணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்க உள்ளது. பெரும்பாலும் தீபாவளி, பொங்கல் பண்டிகை என்றாலே பெரும்பாலான மக்களும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்தாருடன் கொண்டாட விருப்பப்படுவார்கள் அதனால் பண்டிகைக்கு முதல் நாளில் பயணம் மேற்கொள்வர்.

இந்த பண்டிகை நாட்களில் ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். அதனால் மக்கள் முன்கூட்டியே டிக்கெட் புக்கிங் செய்வர். அந்த வகையில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி தேதி தீபாவளி பண்டிகை வர உள்ளது.

deepavali festival,trains,booking,tickets ,தீபாவளி பண்டிகை,ரயில்கள் ,முன்பதிவு ,டிக்கெட்

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே அதாவது நாளை (ஜூன் 23) முதல் ரயில் முன்பதிவு சேவை தொடங்க உள்ளது. தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு செல்வோர், நாளை முதல் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். பெரும்பாலான பயணிகள் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து வருவதால் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தின் தரத்தை சமீபத்தில் உயர்த்தி உள்ளது.

அதனால் ரயில் டிக்கெட் முன் பதிவியில் எவ்வித பாதிப்பும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு கொரோனா பாதிப்பு தற்போது குறைவாக உள்ளதால் இந்தாண்டு தீபாவளிக்கு வழக்கம் போல அதிகளவில் மக்கள் ரயில்களில் பயணம் செய்வர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|