Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென்மாவட்ட ரயில்களில் தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தன

தென்மாவட்ட ரயில்களில் தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தன

By: vaithegi Fri, 14 July 2023 09:48:10 AM

தென்மாவட்ட ரயில்களில் தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தன


சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை உள்ளிட்ட நகரங்களிலிருந்து பலரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்று தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். எனவே இதன் காரணமாக சிறப்பு ரயில்களும், சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். அதேசமயம் சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிக்க பயணிகள் முன்பதிவு செய்வதும் வழக்கமான ஒன்று.

அந்த வகையில் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் வாயிலாக 120 நாட்களுக்கு முன்னதாகவே பயண சீட்டை முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி கடந்த 12ஆம் தேதி முதல் தொடங்கியது.

train ticket booking,diwali ,ரயில் டிக்கெட் முன்பதிவு,தீபாவளி

இதனை அடுத்து நவம்பர் 9ம் தேதி வெளியூர் செல்லும் நபர்கள் ஜூலை 12ஆம் தேதியும் , நவம்பர் 10ஆம் தேதி செல்பவர்கள் ஜூலை 13ஆம் தேதியும், நவம்பர் 11ஆம் தேதி செல்பவர்கள் ஜூலை 14ஆம் தேதியும் , நவம்பர் 12ஆம் தேதி செல்பவர்கள் ஜூலை 15ஆம் தேதியும் ரயில்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது

இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தென்மாவட்ட ரயில்களில் இன்றும் 15 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தது. கன்னியாகுமரி, நெல்லை, அனந்தபுரி, குருவாயூர், பாண்டியன் விரைவு ரயில்களின் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. நேற்று முன்தினம் முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களுக்குள்ளாக விற்று தீர்ந்தன. அதேபோன்று நேற்று முன்பதிவு தொடங்கிய 2 நிமிடங்களில் நெல்லை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

Tags :