Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பராமரிப்பு பணி ... மே 20 முதல் இந்த பகுதிகளில் ரயில்கள் ரத்து

பராமரிப்பு பணி ... மே 20 முதல் இந்த பகுதிகளில் ரயில்கள் ரத்து

By: vaithegi Tue, 16 May 2023 5:07:16 PM

பராமரிப்பு பணி  ...  மே 20 முதல் இந்த பகுதிகளில் ரயில்கள் ரத்து

சென்னை: வருகிற மே 20 ஆம் தேதி முதல் மாற்றம் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக கேரளம் வழியாக செல்லும் ரயில்களும், கேரளாவில் இருந்து வரும் ரயில்களும் வருகிற மே 20-ம் முதல் மாற்றம் செய்யப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், சென்னை எழும்பூரிலிருந்து மே 21 -ம் தேதி காலை 9 மணி முதல் குருவாயூர் செல்லும் விரைவு ரயில் (எண் 16127) எர்ணாகுளத்துடன் நிறுத்தப்படும்.

அதே போன்று மருமார்கமாக இந்த ரயில் (எண் 16128) குருவாயூரில் இருந்து மே 22 ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு புறப்படுவதற்கு பதில் ஏர்க்காகுளத்தில் இருந்து மே 23 -ம் தேதி அதிகாலை 1.20 மணிக்கு புறப்படும். மேலும் கன்னியாகுமாரி – புணே இடையே இயங்கும் விரைவு ரயில் (எண் :16382) மே 21 காலை 8.40 மணிக்கு புறப்பட்டு எர்ணாகுளம், திருப்பூர், கோவை வழியாக செல்லாமல் திருநெல்வேலி, ஈரோடு, திண்டுக்கல் திண்டுக்கல் வழியாக புணே சென்றடையும்.

trains,maintenance work ,ரயில்கள் , பராமரிப்பு பணி

இதனை அடுத்து திருநானந்தபுரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 21) இரவு 8.30 மணிக்கு மதுரை செல்லும் விரைவு ரயில் (எண்:16343) மறுமார்கமாக மதுரையில் இருந்து மே 22 -ம் தேதி மாலை 4.10 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயில் (எண்: 16344)ஆகிய ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

மேலும் அதே போன்று மங்களூரிலிருந்து சனிக்கிழமை (மே 20) 5.05 மணிக்கு நாகர்கோயில் செல்லும் விரைவு ரயில் (எண்: 16649) மறுமார்க்கமாக நாகர்கோவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 21) அதிகாலை 4.15 மணிக்கு மங்களூர் செல்லும் விரைவு ரயில் (எண் 16650) ஆகிய ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

Tags :
|