Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரயில்கள் ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரத்து; ரயில்வே வாரியம் அதிரடி அறிவிப்பு

ரயில்கள் ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரத்து; ரயில்வே வாரியம் அதிரடி அறிவிப்பு

By: Nagaraj Fri, 26 June 2020 11:58:09 AM

ரயில்கள் ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரத்து; ரயில்வே வாரியம் அதிரடி அறிவிப்பு

ரயில்கள் ரத்து... நாடு முழுவதும் வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்படும் ரெயில்கள் அனைத்து ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மார்ச் மாதம் 25-ந்தேதி நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு டிக்கெட் கட்டணத்தை ரெயில்வே வாரியம் திரும்ப வழங்கியது.

மத்திய அரசு ஐந்து முறை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது. இந்த ஐந்து முறையும் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு சிறப்பு ரெயில்களை இயக்க அனுமதி அளித்தது.

regular trains,cancellations,august 12,railway board ,வழக்கமான ரயில்கள், ரத்து, ஆகஸ்ட் 12, ரயில்வே வாரியம்

இதனால் கடந்த மாதம் 12-ந்தேதியில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் ஊரடங்கு வருகிற ஜூன் 30-ந்தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

அதுவரை வழக்கமான ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் வழக்கமான கால அட்டவணையின்படி இயக்கப்படும் மெயில், எக்ஸ்பிரஸ், பேசஞ்சர், புறநகர் ரெயில்கள் என அனைத்தும் ஆகஸ்ட் 12-ந்தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

Tags :