Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவையில் 9 இடங்களில் கொரோனா நோய் தொற்று அதிகரித்தால் மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதிகளாக மாற்றம்

கோவையில் 9 இடங்களில் கொரோனா நோய் தொற்று அதிகரித்தால் மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதிகளாக மாற்றம்

By: vaithegi Wed, 29 June 2022 6:19:18 PM

கோவையில் 9 இடங்களில் கொரோனா நோய் தொற்று அதிகரித்தால் மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதிகளாக மாற்றம்


கோவை: கோவையில் சமீப நாட்களாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்றவும், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தவும், அனைத்து மாவட்ட சுகாதார துறையினருக்கும் தமிழக சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 100 க்கும் மேல் அதிகரித்து செல்கிறது.

இதை கட்டுப்படுத்த, மாவட்ட சுகாதாரத் துறையினர் சார்பில், பரிசோதனையை அதிகரித்தல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை மாவட்டம் குரும்பபாளையம் பகுதியில் உள்ள ஒரே தெருவில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு, ஆர்.எஸ்.புரத்தில் ஒரே வீட்டில் 3 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், வடவள்ளி, தொண்டாமுத்துார், பேரூர் செட்டிப்பாளையம் உள்ளிட்ட 9 இடங்கள், ‘மைக்ரோ கன்டெய்ன்மென்ட்’ பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளன.

corona,micro controller ,கொரோனா ,மைக்ரோ கட்டுப்பாட்டு

இது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியது, ‘கோவை மாவட்டத்தில் தற்போது 9 இடங்கள் ‘மைக்ரோ கன்டெய்ன்மென்ட்’ பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. மேலும் ஒரு வீட்டில் 3 பேருக்கு மேல் நோய் பாதிப்பு இருந்தால் வீட்டை மட்டும் மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தொடர்ந்து, ஒரு வீதியில் பாதிக்கு மேல் எண்ணிக்கை அதிகம் இருந்தால், வீதி முழுவதும் கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றப்படும். இந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படும். பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்புடையவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் பொதுமக்கள் அனைவரும் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags :
|