Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவண்ணாமலை கிரிவலத்திற்காக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம் ... போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு

திருவண்ணாமலை கிரிவலத்திற்காக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம் ... போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு

By: vaithegi Sat, 09 July 2022 1:34:41 PM

திருவண்ணாமலை கிரிவலத்திற்காக  500 சிறப்பு பேருந்துகள் இயக்கம் ... போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு

திருவண்ணாமலை : பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வது வழக்கமாகிவிட்டது.

இதை தொடர்ந்து உள்மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், வெளிநாட்டு பயணிகள் கூட திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

transport corporation,kriwalam ,போக்குவரத்துக்கழகம் ,கிரிவலம்

அதிலும் விடுமுறை தினங்கள் மற்றும் விஷேச தினங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. அதை விட கிரிவலத்திற்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவது வழக்கமாகிவிட்டது. இதனால், கிரிவலத்திற்காக வரும் பொதுமக்களின் வசதிக்காக விழுப்புரம் மாவட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பாக பௌர்ணமி அன்று மட்டும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயங்கப்படுகின்றன.

அதன்படி இந்த மாதம் ஜூலை 13 ஆம் தேதி பௌர்ணமி என்பதால் கிரிவலத்திற்காக சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டு கொண்டிருக்கிறது. அதாவது, ஜூலை 13 ஆம் தேதி காலையில் இருந்து இரவு வரைக்கும் சிறப்பு பேருந்துகள் இயங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை கோயம்பேடு, தாம்பரம், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ஆற்காடு, ஆரணி, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயங்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரி அவர்கள் அறிவித்துள்ளார்.

Tags :