Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சாதாரண கட்டண பேருந்துகள் 100% இயங்குவதை உறுதிப்படுத்தவும் .. போக்குவரத்து கழகம்

சாதாரண கட்டண பேருந்துகள் 100% இயங்குவதை உறுதிப்படுத்தவும் .. போக்குவரத்து கழகம்

By: vaithegi Sat, 13 Aug 2022 12:38:10 PM

சாதாரண கட்டண பேருந்துகள் 100% இயங்குவதை உறுதிப்படுத்தவும்  ..  போக்குவரத்து கழகம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதன் பின் கொரோனா பாதிப்பு குறைந்து தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளது. இந்நிலையில் பல பேருந்துகள் இயக்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்த வகையில் இருக்கிறது.

அதிலும் குறிப்பாக சாதாரணப் பேருந்துகளின் இயக்கம் என்பது உரிய அட்டவணைப்படி இயக்கப்படுவதில்லை என்று புகார் வந்துள்ளது. இந்தா நிலையில் இது பற்றி சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.

transport corporation,regular fare buses ,போக்குவரத்து கழகம் ,சாதாரண கட்டண பேருந்துகள்

அதன்படி அதில் சென்னையில் தினமும் 3,233 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் தினசரி 30 லட்சம் பயணிகள் சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பெரும்பாலான பணிமனைகளில் பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்கப்படுவதில்லை எனவும் பல பேருந்துகள் இயக்கம் குறைக்கப்பட்டு இருப்பதாகவும் தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

இதை அடுத்து எனவே பேருந்துகளை குறித்த நேரத்தில் இயக்கவும், சாதாரண பேருந்துகளின் 100 சதவீத இயக்கத்தை உறுதிப்படுத்தவும், கடைசி பேருந்துகள் மற்றும் இரவு பேருந்துகளை NOT RUN இன்றி சரியாக இயக்கவும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அனைத்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவிப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :