Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இதுவரை 1.62 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் முன்பதிவு .. போக்குவரத்து துறை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இதுவரை 1.62 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் முன்பதிவு .. போக்குவரத்து துறை

By: vaithegi Thu, 05 Jan 2023 10:45:32 AM

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இதுவரை 1.62 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் முன்பதிவு   ..  போக்குவரத்து துறை

சென்னை: பொங்கல் பண்டிகை வருகிற 15ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவ்கர்ல தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதன் பிறகு பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவோரின் வசதிக்காக தமிழகம் முழுவதும் வருகிற 12-ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

pongal festival,transport department,special buses ,பொங்கல் பண்டிகை,போக்குவரத்து துறை, சிறப்பு பேருந்துகள்

மேலும் அத்துடன் பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்புவதற்காக 15,619 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 முதல் 14ஆம் தேதி வரை சென்னையில் இருந்து தினமும் 2,100 பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும் நிலையில் 3 நாட்களும் சேர்த்து 4449 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதையடுத்து இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்காகதங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இதுவரை மற்றும் 1.62 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டம் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ஜனவரி 13, 14ஆம் தேதி இரவு சென்னையிலிருந்து புறப்படும் பேருந்துகளில் முன்பதிவு நிறைவடைந்துள்ளது.

Tags :