- வீடு›
- செய்திகள்›
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 16,888 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் ..... போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 16,888 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் ..... போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
By: vaithegi Mon, 10 Oct 2022 3:08:17 PM
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 16,888 சிறப்பு பஸ்கள் ... தீபாவளி பண்டிகை வருகிற 24ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி சென்னை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் உள்ள பல லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் செல்ல ரெயில்களில் முன்பதிவு செய்து தயாராக உள்ளனர்.
அரசு பஸ்களுக்கான முன்பதிவு கடந்த மாதம் 24-ந்தேதி முதல் தொடங்கியது. தீபாவளி திங்கட்கிழமை வருவதால் அதற்கு முந்தைய சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் சொந்த ஊர்களுக்கு 21-ந்தேதியே (வெள்ளிக்கிழமை) பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். அரசு விரைவு பஸ்களில் 21, 22, 23 ஆகிய 3 நாட்களுக்கு முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது.
இதையடுத்து இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 16,888 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சென்னையிலிருந்து தினசரி 2,100 பஸ்களுடன் 4,218 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும் என்றும் அக்டோபர் 21,22,23 ஆகிய தேதிகளில் இந்த சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
தீபாவளிக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. மேலும் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மக்களின் வசதிக்காக இந்த பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை தரப்பில் தெரிவித்துள்ளது.