Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்த திட்டத்திற்கு எதிராக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்த திட்டத்திற்கு எதிராக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

By: Nagaraj Thu, 09 Feb 2023 08:54:20 AM

பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்த திட்டத்திற்கு எதிராக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

பாரிஸ்: பிரான்ஸ் அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய சீர்திருத்த திட்டத்திற்கு எதிராக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பொது போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 10 அன்று, பிரெஞ்சு பிரதமர் எலிசபெத் போர்ன் பிரெஞ்சு அரசாங்கத்தின் ஓய்வூதியத் திட்டங்களை அறிவித்தார். அதன்படி, வரும் 2030ம் ஆண்டுக்குள் ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 64 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு பணி செய்பவர்களால் மட்டுமே குறைந்தபட்ச ஓய்வூதியத்தை பெற இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டு முதல் 43 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு மட்டுமே முழு ஓய்வூதியம் பெற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய சீர்திருத்த திட்டத்திற்கு எதிராக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் நாட்டில் பொது போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

french government,protest,reform,transport,workers , ஊழியர்கள், சீர்திருத்தம், பிரான்ஸ் அரசு, போக்குவரத்துறை, போராட்டம்

பிரான்ஸ் பொதுத் தொழிலாளர் சம்மேளனம் தெரிவித்த கருத்தின்படி, ஜனவரி 19 அன்று நடைபெற்ற போராட்டத்தில் 4 லட்சம் பேர் பங்கேற்றதாகவும், இரண்டாம் கட்ட போராட்டத்தில் 5 லட்சம் பேர் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் காரணமாக நாட்டின் மூன்றில் ஒரு பங்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதாக பிரான்சின் தேசிய ரயில்வே தெரிவித்துள்ளது.

இதனால் குறைவான ரயில்கள் இயக்கப்படுவதால், பொதுமக்கள் தங்கள் பயணங்களை ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம், வரும் 11ம் தேதி நடைபெறும் போராட்டத்தில் அதிக அளவில் மக்கள் பங்கேற்க வேண்டும் என பிரான்ஸ் பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

Tags :
|