Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 10 நாட்களுக்கு விமானத்தின் நடு இருக்கையில் பயணம் செய்யலாம்; உச்ச நீதிமன்றம் அனுமதி

10 நாட்களுக்கு விமானத்தின் நடு இருக்கையில் பயணம் செய்யலாம்; உச்ச நீதிமன்றம் அனுமதி

By: Nagaraj Tue, 26 May 2020 3:01:00 PM

10 நாட்களுக்கு விமானத்தின் நடு இருக்கையில் பயணம் செய்யலாம்; உச்ச நீதிமன்றம் அனுமதி

அடுத்த, 10 நாட்களுக்கு, 'ஏர் இந்தியா' விமான சேவையில், நடு இருக்கையில் பயணம் செய்ய, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஏர் இந்தியா விமானி, தேவன் கனனி, மும்பை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசு, கொரோனா பரவலை தடுக்க, மார்ச், 23ல் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், வெளிநாடுகளில் உள்ள இந்தியரை, விமானம் மூலம் திரும்ப அழைத்து வரும்போது, இரு பயணியருக்கு இடையே, ஒரு இருக்கையை காலியாக விட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

middle seat,petition,order,court,air india,mumbai ,நடு இருக்கை, மனு, உத்தரவு, நீதிமன்றம், ஏர் இந்தியா, மும்பை

ஆனால், இந்த விதிமுறையை, ஏர் இந்தியா பின்பற்றவில்லை. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து மும்பை வந்த விமானத்தில், அனைத்து இருக்கைகளிலும் பயணியர் இருந்தனர். அதற்கு ஆதாரமான புகைப்படம், மனுவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்நாட்டு விமான போக்குவரத்திலும், மத்திய அரசு அறிவித்தபடி நடு இருக்கையை காலியாக வைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஏர் இந்தியா, 'மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிக்கையில், மே, 25ல் துவங்கும் உள்நாட்டு விமான போக்குவரத்தில், விமானத்தின் நடு இருக்கையை காலியாக வைக்குமாறு குறிப்பிடவில்லை' என, தெரிவித்தது. இதையடுத்து, ஏர் இந்தியாவும், மத்திய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையமும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட, மும்பை உயர் நீதிமன்றம், விசாரணையை, ஜூன், 2க்கு தள்ளி வைத்தது.

middle seat,petition,order,court,air india,mumbai ,நடு இருக்கை, மனு, உத்தரவு, நீதிமன்றம், ஏர் இந்தியா, மும்பை

இதை எதிர்த்து, மத்திய அரசும், ஏர் இந்தியாவும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இதை நேற்று ரமலான் பண்டிகையையொட்டி விடுமுறை என்ற போதிலும், அவசர வழக்காக கருதி, உச்ச நீதிமன்றம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக விசாரித்தது.

அப்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:

மத்திய அரசு, விமான நிறுவனங்களை விட, மக்களின் சுகாதார பாதுகாப்பு பற்றி தான் அதிகம் கவலைப்பட வேண்டும். என்றாலும், அடுத்த பத்து நாட்களுக்கு, ஏர் இந்தியா விமான போக்குவரத்தில், நடு இருக்கைகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

அதேசமயம், விமான பயணத்தில் நடு இருக்கையை காலியாக வைப்பது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்டவை குறித்து முடிவெடுக்கும் பொறுப்பு, மும்பை உயர் நீதிமன்றத்திற்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|