Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் புதியதாக 500 மின்சார பேருந்துகள் இயக்க நடவடிக்கை .. சோதனைகள் விரைவில் தொடங்க உள்ளது .. சிவசங்கர்

தமிழகத்தில் புதியதாக 500 மின்சார பேருந்துகள் இயக்க நடவடிக்கை .. சோதனைகள் விரைவில் தொடங்க உள்ளது .. சிவசங்கர்

By: vaithegi Sun, 21 Aug 2022 1:58:22 PM

தமிழகத்தில் புதியதாக 500 மின்சார பேருந்துகள் இயக்க நடவடிக்கை ..  சோதனைகள் விரைவில் தொடங்க உள்ளது   ..   சிவசங்கர்

சென்னை: தமிழகத்தில் பெண்களின் தினசரி போக்குவரத்தை எளிமையாக்கும் விதமாக தமிழக அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்திற்கான சிறப்பு பேருந்துகளை இயக்கி கொண்டு வருகிறது.

இதை அடுத்து இந்த மகளிர் இலவச பேருந்துகளை ஒரு சில ஓட்டுனர்கள் சரியாக நிறுத்தங்களில் நிறுத்துவது இல்லை எனவும், நடத்துனர்கள் முறையாக நடந்து கொள்வதில்லை எனவும்புகார்கள் தமிழக அரசிடம் பெறப்பட்டது. இதனால் தமிழக அரசு மகளிர் இலவச பேருந்துகளில் இது போன்ற புகார்கள் மீண்டும் பெறப்பட்டால், சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது தக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது.

electric buses,shivashankar ,மின்சார பேருந்துகள்,சிவசங்கர்

இதனை தொடர்ந்து சென்னையில் புதிதாக 500 மின்சார பேருந்துகளை இயக்க உள்ளதாகவும், இந்த நடைமுறைக்கு முன்னதாக 100 பேருந்துகளை மட்டும் வாங்கி சென்னையில் சோதனை முறையில் இயக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இச்சோதனை முறை வெற்றி அடைந்த பின் தமிழகம் முழுவதும் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, சென்னை போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முதற்கட்டமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இதன்பிறகு அனைத்து பகுதி பேருந்துகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என அறிவித்தார்.

Tags :