Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரேசில் நாட்டில் சிவப்பு நிற பலூன்களை பறக்க விட்டு உயிரிழந்தோருக்கு அஞ்சலி

பிரேசில் நாட்டில் சிவப்பு நிற பலூன்களை பறக்க விட்டு உயிரிழந்தோருக்கு அஞ்சலி

By: Karunakaran Mon, 10 Aug 2020 4:44:01 PM

பிரேசில் நாட்டில் சிவப்பு நிற பலூன்களை பறக்க விட்டு உயிரிழந்தோருக்கு அஞ்சலி

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. 8 மாதங்கள் கடந்தும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தபாடில்லை. கொரோனா வைரசின் பிடியில் அதிகம் சிக்கியுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 51 லட்சத்தை நெருங்கியுள்ளது.

மேலும் அமெரிக்காவில் 1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உள்ள கொரோனா அதிகம் பாதித்த நாடாக பிரேசில் உள்ளது. 21 கோடி மக்கள் தொகையை கொண்ட பிரேசிலில் கடந்த மே மாத இறுதியில் இருந்து தினந்தோறும் சராசரியாக ஆயிரம் பேர் பலியாகின்றனர். இதுவரை அங்கு 30 லட்சத்து 12 ஆயிரத்து 412 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona death,red balloons,brazil,corona virus ,கொரோனா மரணம், சிவப்பு பலூன்கள், பிரேசில், கொரோனா வைரஸ்

தற்போது பிரேசிலில் பலி எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்த நிலையில், உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ரியோ டி பாஸ் என்ற புகழ்பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆயிரம் சிவப்பு நிற பலூன்களை பறக்க விட்டது. பிரேசிலில் தற்போது 1 லட்சத்து 477 பேர் பலியாகியுள்ளனர். பலியானோருக்கு நாடாளுமன்ற சபாநாயகர் டேவி ஆல்கொலம்பரே, 4 நாட்கள் துக்கம் அறிவித்துள்ளார்.

பிரேசில் கொரோனா பிடியில் சிக்கித்தவிப்பதற்கு ஆரம்பத்தில் அந்நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சொனரோ காட்டிய அலட்சியப்போக்குதான் காரணம் என்று கூறப்படுகிறது. ஜெயிர் போல்சொனரோ அரசு, கொரோனாவை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை சரிவர எடுக்காத நிலையில், உள்ளூர் அதிகாரிகள் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் திறப்பதில் கவனம் செலுத்துவதால் கொரோனா வைரஸ் பரவல் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளத்தாக வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags :
|