Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருச்சி ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் பகுதி கோபுர விரிசலை உடன் சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

திருச்சி ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் பகுதி கோபுர விரிசலை உடன் சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

By: Nagaraj Wed, 26 July 2023 06:46:14 AM

திருச்சி ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் பகுதி கோபுர விரிசலை உடன் சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு வாசல் பகுதியில் அமைந்துள்ள கோபுரத்தில் விரிசல் விரிவடைந்து வருகிறது. இதை உடன் சீரமைத்து பராமரிக்க வேண்டும் என்று பக்தர்களும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் காவேரி கொள்ளிடம் கரைகளுக்கு நடுவே, ஆறுகள் சூழ்ந்த தீவு மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சாமி கோயில் தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு வாய்ந்த கோவில்களில் ஒன்றாகும். 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாவும் கருதப்படுகிறது. இதனால் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம்.

இந்நிலையில் ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்குப் பகுதியான கீழவாசலில் அமைந்துள்ள கோபுர வாசலின் மேற்புறத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் விரிசல் 4 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலையில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் விரிசலை சரி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது விரிசல் விரிவடைந்துள்ளது.

public,srirangam,temple gopuram,cracked,should be repaired ,பொதுமக்கள், ஸ்ரீரங்கம், கோயில் கோபுரம், விரிசல், சீரமைக்க வேண்டும்

இதனால் கீழவாசல் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் சிவராம் குமார், கீழவாசல் கோபுர விரிசலை சரி செய்யும் பணி தொடங்கப்பட்ட நிலையில் தற்போது விரிசல் விரிவடைந்து இருக்கிறது. இதை சரி செய்வதற்கு 67 லட்சம் செலவில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதற்கான நிதியை தனியாரிடம் இருந்தும் மற்றும் கோயில் நிர்வாகத்தின் சார்பிலும் திரட்ட முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் காலதாமதம் ஆகும் பட்சத்தில் கோயில் நிர்வாகத்தின் சார்பிலேயே முழு நிதி ஒதுக்கப்பட்டு பணி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதியில் பலகைகளை வைத்து முட்டுக் கொடுக்கப்பட்டுள்ளதால் விரிசல் மேலும் விரிவடைய வாய்ப்பில்லை என்று கூறப்பட்டிருக்கிறது.

அதேசமயம் சிறப்பு வாய்ந்த கோயிலும், தமிழர்களின் கட்டிடக்கலைக்குச் சான்றாகவும், புராதான சின்னமாகவும் உள்ள கோயிலின் கோபுரத்தில் ஏற்பட்டுள்ள விரசலை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags :
|