Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நோய்களை கண்டறியும் நாற்காலியை கண்டுபிடித்த திருச்சி மாணவர்

நோய்களை கண்டறியும் நாற்காலியை கண்டுபிடித்த திருச்சி மாணவர்

By: Nagaraj Wed, 29 Mar 2023 11:21:51 PM

நோய்களை கண்டறியும் நாற்காலியை கண்டுபிடித்த திருச்சி மாணவர்

திருச்சி: நோய்களை கண்டறியும் நாற்காலி... ஏற்கனவே நோய்களைக் கண்டறிய ஸ்மார்ட் வாட்ச் இருப்பது போல், நோய்களைக் கண்டறியும் ஸ்மார்ட் நாற்காலியை திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சுபாஷ் ஸ்மார்ட் நாற்காலியைக் கண்டுபிடித்துள்ளார். இந்த நாற்காலியில் நோயாளிகள் அமர்ந்தாலே போதும், எந்த வித பரிசோதனையும் இன்றி தங்களின் நோய் என்ன என்பதை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும் என மாணவர் கூறினார்.

detection,smart disease,trichy, ,இளைஞர், சாதனை, திருச்சி, நாற்காலி, மாணவர்

கொரோனா போன்ற தொற்று நோய் ஏற்படும் போது, மருத்துவர்களும், செவிலியர்களும் நோயாளிகளை அருகில் இல்லாமல் சிகிச்சை செய்ய வேண்டும் என்று நினைத்ததாகவும், அந்த எண்ணத்தின் விளைவே இந்த ஸ்மார்ட் நாற்காலி என்றும் அவர் கூறினார்.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் நோயாளி ஸ்மார்ட் நாற்காலியில் அமர்ந்தால், மானிட்டர் அவரது உடலில் உள்ள குறைபாடுகளை உடனடியாக வெளிப்படுத்தும் என்றும், அதன் அடிப்படையில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றும் மாணவர் விளக்கினார்.

Tags :
|