Advertisement

தாமதமாக இயக்கப்படும் திருச்சி ரயில்கள்

By: vaithegi Mon, 31 July 2023 09:28:44 AM

தாமதமாக இயக்கப்படும் திருச்சி ரயில்கள்


திருச்சி : திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஒவ்வொரு ரயிலாக அனுமதி .. திருச்சியில் தண்டவாள சீரமைப்பு பணி காரணமாக 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் 5 மணி நேரம் தாமதமாக புறப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட விரைவு ரயில் சுமார் 5 மணி நேரம் தாமதம் ஏற்பட்டு உள்ளதால் பயணிகள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.

பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட விரைவு ரயில்கள் இன்று 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, விழுப்புரம், கரூர்: முன்பதிவு இல்லாத ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து என அறிவிக்கப்பட்டு உள்ளது.

trichy,trains ,திருச்சி ,ரயில்கள்


திருச்சியிலிருந்து வேளாங்கன்னி உள்ளிட்ட இடங்களுக்கு முன்பதிவு இல்லாத ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

திருச்சி -திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும் எனவும் சென்னை எழும்பூர் -திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில், 2 மணி நேரம் தாமதமாக இன்று காலை 9.15 மணிக்கு புறப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|