வடகொரியா உளவு செயற்கை கோளை ஏவியதால் சிக்கல்: போர் பதற்றம் உருவானது
By: Nagaraj Fri, 24 Nov 2023 7:12:01 PM
தென்கொரியா: வடகொரிய அரசு உளவு செயற்கைக் கோளை ஏவியதன் எதிரொலியாக கொரிய தீபகற்பத்தில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
வடகொரிய உளவு செயற்கைக்கோளை ஏவியதை கண்டித்துள்ள தென்கொரிய அரசு, 2018 ஆம் ஆண்டு வடகொரியா உடன் மேற்கொண்ட ராணுவ ஒப்பந்தத்தின் சில சரத்துகளை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளது.
இருநாடுகள் இடையே போர் பதற்றத்தை தணிக்கும் விதமாக 5 ஆண்டுகளுக்கு முன் எல்லையை ஒட்டி 5 கிலோமீட்டர் சுற்றளவில் ராணுவத்தை குவிக்கவோ, போர் ஒத்திகை மேற்கொள்ளவோ கூடாது என ஒப்பந்தம் கையெழுத்தானது.
தற்போது உளவு செயற்கைக்கோளை ஏவி இருப்பதால், வட கொரிய எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தப்போவதாக தென்கொரிய தெரிவித்துள்ளது. இதற்கு பதிலாக, அதி நவீன ஆயுதங்களுடன் எல்லையில் ராணுவத்தை குவிக்கப்போவதாக வடகொரியா தெரிவித்துள்ளது.