Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி - டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி - டிரம்ப் குற்றச்சாட்டு

By: Karunakaran Wed, 04 Nov 2020 4:54:46 PM

அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி - டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிக வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். டிரம்ப் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார். இந்நிலையில் தேர்தல் நிலவரம் தொடர்பாக அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அதிபர் டிரம்ப், நாம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறோம். தேர்தலில் மகத்தான ஆதரவு அளித்த அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். ஜார்ஜியா, டெக்சாஸ் உள்ளிட்ட மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளோம். பென்சில்வேனியா, மிச்சிகன், விஸ்கான்சின் மாநிலங்களிலும் வெற்றி கிடைக்கும். ஆனால் முடிவுகள் வெளியாவதில் தாமதம் செய்கின்றனர் என்று கூறினார்.

trump,presidential election,joe biden,america ,டிரம்ப், ஜனாதிபதித் தேர்தல், ஜோ பிடென், அமெரிக்கா

மேலும் அவர், இந்த தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. எதிர்க்கட்சியினர் வெற்றியை திருடப் பார்க்கிறார்கள். தேர்தலுக்குப் பின்னரும் வாக்களிக்க முயற்சி நடக்கிறது. தேர்தலுக்குப் பின்னரும் வாக்களிக்க முயற்சி நடக்கிறது. இதனை தடுக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவதற்காக உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்று பேசினார்.

பென்சில்வேனியா உள்பட 3 முக்கியமான மாநிலங்களில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். இழுபறியில் உள்ள இந்த மாநிலங்களில் இன்னும் முடிவுகள் வெளியாகவில்லை. ஆனால் தபால் வாக்குகளை எண்ண ஆரம்பித்தால் டிரம்ப் பின்னடைவை சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலின் முடிவுகள் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|