Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் சீனர்களுக்கு மேலும் விசா கட்டுப்பாடுகளை விதித்து டிரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவு

அமெரிக்காவில் சீனர்களுக்கு மேலும் விசா கட்டுப்பாடுகளை விதித்து டிரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவு

By: Karunakaran Sat, 05 Dec 2020 2:19:52 PM

அமெரிக்காவில் சீனர்களுக்கு மேலும் விசா கட்டுப்பாடுகளை விதித்து டிரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவு

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக உலகளவில் அமெரிக்கா அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசை பரப்பியதால் சீனா மீது குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்நாட்டுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.

கொரோனா வைரஸ் மட்டுமின்றி வர்த்தகப்போர், போன்ற பல்வேறு விவகாரங்களில் அமெரிக்கா - சீனா இடையை மோதல் போக்கு நீடித்து வருகிறது. அமெரிக்காவில் உளவு பார்த்ததாக கூறி சீன தூதரகத்தை மூடியது. அதுபோல் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்க தடை விதித்து அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுத்தது.

trump,visa restrictions,chinese,us ,டிரம்ப், விசா கட்டுப்பாடுகள், சீன, அமெரிக்கா

மேலும் கம்யூனிஸ்டு கட்சியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அமைப்புகளுக்கு விசா தடை விதித்தது. இந்நிலையில் சீனர்களுக்கு மேலும் விசா கட்டுப்பாடுகளை டிரம்ப் நிர்வாகம் விதித்துள்ளது. சீன கம்யூனிஸ்டு கட்சியின் ஐக்கிய முன்னணி பணித்துறை உடல் ரீதியாக வன்முறை, திருட்டு, தனியார் தகவல்களை வெளியிடுதல், உளவு, நாசவேலை தீங் கிழைக்கும் தலையீடு ஆகியவற்றில் ஈடுபட்டதாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்கா,சீனா இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், டிரம்ப் நிர்வாகம் விதித்துள்ள இந்த அதிரடி உத்தரவு மேலும் இருநாடுகள் இடையே பதற்றத்தை நீடித்துள்ளது. இருப்பினும் ஜனவரி மாதம் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவி ஏற்கவுள்ளதால், அமெரிக்கா- சீனா உறவில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|