Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போர்ட்லேண்ட் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக டிரம்பும், ஜோ பிடனும் பரஸ்பர குற்றச்சாட்டு

போர்ட்லேண்ட் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக டிரம்பும், ஜோ பிடனும் பரஸ்பர குற்றச்சாட்டு

By: Karunakaran Tue, 01 Sept 2020 2:41:36 PM

போர்ட்லேண்ட் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக டிரம்பும், ஜோ பிடனும் பரஸ்பர குற்றச்சாட்டு

அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவரை போலீசார் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவத்தை கண்டித்து போர்ட்லேண்ட் நகரில் 3 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்கிற அமைப்பின் சார்பில் நடந்து வரும் இந்த போராட்டத்தை ஜனாதிபதி டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்த போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் விதமாக போராட்டம் நடைபெறும் மாகாணங்களுக்கு டிரம்ப் கூடுதல் மத்திய படைகளை அனுப்பி வருகிறார். ஆனால் ஒரேகான் மாகாணத்தில் ஜனநாயக கட்சியை சேர்ந்த டெட் வீலர் மேயராக இருப்பதால், அவர் மத்திய படைகளை குவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

trump,joe biden,gun shooting,portland ,டிரம்ப், ஜோ பிடன், துப்பாக்கிசூடு, போர்ட்லேண்ட்

கடந்த சனிக்கிழமை போர்ட்லேண்ட் நகரில் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ அமைப்பினரின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டிரம்பின் ஆதரவாளர்கள் பேரணி நடத்தியபோது, இருதரப்புக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. மேலும் துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. இதில் பேரணியில் கலந்து கொண்ட டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக டிரம்ப், போர்ட்லேண்டை நிர்வகிக்கும் தீவிர இடதுசாரி ஜனநாயக மேயர் போலியான மேயராக செயல்படும் வரை அங்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது. ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இருக்கும் ஜோ பிடன் தனது கட்சியின் மேயர்களை வழி நடத்த விரும்பவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ஜோ பிடன், இடது அல்லது வலதுபுறமாக இருந்தாலும் ஒவ்வொருவரும் செய்யும் வன்முறையை நான் கண்டிக்கிறேன். டிரம்பும் அவ்வாறே செய்ய நான் சவால் விடுகிறேன். போர்ட்லேண்ட் வன்முறை டிரம்பின் கண்காணிப்பின் கீழ் நடக்கிறது. இது டிரம்பின் அமெரிக்கா. டிரம்பின் அமெரிக்காவில் நாம் பாதுகாப்பாக இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Tags :
|