Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜனாதிபதி தேர்தலில் இந்து சமூகத்தின் வாக்குகளைக் கவர டிரம்ப் மற்றும் ஜோ பிடன் தீவிர பிரச்சாரம்

ஜனாதிபதி தேர்தலில் இந்து சமூகத்தின் வாக்குகளைக் கவர டிரம்ப் மற்றும் ஜோ பிடன் தீவிர பிரச்சாரம்

By: Karunakaran Thu, 20 Aug 2020 3:54:15 PM

ஜனாதிபதி தேர்தலில் இந்து சமூகத்தின் வாக்குகளைக் கவர டிரம்ப் மற்றும் ஜோ பிடன் தீவிர பிரச்சாரம்

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக அதிபர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். தற்போது நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் இந்து சமூகத்தின் வாக்குகளைக் கவரும் விதமாக குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ஆகிய இருவரும் தங்களின் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகையின்படி ஒரு சதவீதம் பேர் இந்துக்கள் ஆவர். அமெரிக்காவில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருந்து வருகின்றனர். அமெரிக்க அரசியலில் இந்துக்களுக்கான முக்கியத்துவம் தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிறது. தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

trump,joe biden,hindu community,presidential election ,டிரம்ப், ஜோ பிடன், இந்து சமூகம், ஜனாதிபதித் தேர்தல்

ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவில் இந்துக்களுக்கு மத சுதந்திரங்களுக்கான தடைகளை குறையம் என டிரம்பின் பிரசாரக்குழு உறுதி அளித்துள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் இந்து நம்பிக்கை சமூகத்திற்கு முன்னுரிமை அளிப்பார் என அவரது பிரசாரக்குழு தெரிவித்துள்ளது.

ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் தொடக்க விழாவில், அமெரிக்காவின் பிரபல இந்து தலைவர் நீலிமா கோனுகுண்டாலா கலந்துகொண்டு வேத மந்திரங்களை படித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமெரிக்க தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ‘டிரம்புக்கான இந்து குரல்கள்’ என்கிற அமைப்பை டிரம்ப் பிரசார குழு தொடங்கியுள்ளது.

Tags :
|