Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா இணைய வாய்ப்புள்ளதாக டிரம்ப் அறிவிப்பு

இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா இணைய வாய்ப்புள்ளதாக டிரம்ப் அறிவிப்பு

By: Karunakaran Fri, 21 Aug 2020 4:11:04 PM

இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா இணைய வாய்ப்புள்ளதாக டிரம்ப் அறிவிப்பு

அண்மையில் இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே தூதரக நல்லுறவை ஏற்படுத்துவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்காவின் மத்தியஸ்தம் மூலம் இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், 3-வது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் மாறியுள்ளது. இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு பாலஸ்தீனம், துருக்கி, ஈரான் போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

trump,saudi arabia,israeli-uae,peace deal ,டிரம்ப், சவுதி அரேபியா, இஸ்ரேல்-யுஏஇ, சமாதான ஒப்பந்தம்

தற்போது, இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் மற்றொரு அரபு நாடான சவுதி அரேபியா இணைய வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் பேட்டி அளித்தபோது, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா பங்கேற்க விரும்பும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.

மேலும் அவர், சவுதி அரேபியா பங்கேற்க விரும்பினால் அதை சாத்தியமாக்குவதற்கான வேலைகளை நான் செய்வேன் என்று தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் மற்றொரு அரபு நாடான சவுதி அரேபியா இணைய வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தது பாலஸ்தீனம், துருக்கி, ஈரான் போன்ற நாடுகளை கோபமடைய செய்துள்ளது.

Tags :
|