Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிக்-டாக் செயலியுடன் ஆரக்கிள், வால்மார்ட் நிறுவனங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு டிரம்ப் ஆதரவு

டிக்-டாக் செயலியுடன் ஆரக்கிள், வால்மார்ட் நிறுவனங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு டிரம்ப் ஆதரவு

By: Karunakaran Sun, 20 Sept 2020 7:20:07 PM

டிக்-டாக் செயலியுடன் ஆரக்கிள், வால்மார்ட் நிறுவனங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு டிரம்ப் ஆதரவு

டிக்-டாக் செயலி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், உளவு பார்ப்பதாகவும் அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டுகள் தெரிவித்து வந்த நிலையில் அந்த செயலிக்கு தடை விதிக்கப்படும் என அறிவித்தார். மேலும் அவர், டிக்-டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்துக்கு செப்டம்பர் 15-ந் தேதி விற்க வேண்டும் அல்லது தடை உத்தரவு அமலுக்கு வரும் என்று தெரிவித்தார்.

அதன்பின், டிக்-டாக் செயலியை வாங்க ஆரக்கிள், மைக்ரோசாப்ட், வால்மார்ட் ஆகிய நிறுவனங்கள் பேச்சு வார்த்தை நடத்தின. பின்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம் விலகியது. ஆரக்கிள் நிறுவனம் பைட்டான்ஸ் நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என்று டிரம்ப் தெரிவித்தார். இந்நிலையில் இன்று முதல் அமெரிக்காவில் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

trump,oracle,walmar,tiktok ,டிரம்ப், ஆரக்கிள், வால்மார்,டிக்-டாக்

இந்நிலையில் டிக்-டாக் செயலிக்கு திடீரென அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனத்துடன் டிக்-டாக் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் தடை தள்ளி வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது, டிக்-டாக் செயலிவுடன் ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு டிரம்ப் ஆதரவு அளித்து உள்ளார்.

இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், டிக்-டாக் செயலியுடன் ஆரக்கிள், வால்மார்ட் நிறுவனங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி அமெரிக்காவில் டிக்-டாக் குளோபல் என்ற புதிய நிறுவனம் தொடங்கப்படும். இந்த ஒப்பந்தத்துக்கு எனது ஆதரவு உண்டு என்று தெரிவித்தார். மேலும், இந்த புதிய நிறுவனத்தில் பெரும்பாலும் அமெரிக்கர்கள் இயக்குனர்களாக இருப்பார்கள். ஒரு அமெரிக்க நிர்வாக இயக்குனர் மற்றும் பாதுகாப்பு நிபுணரும் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|
|