Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இந்திய பெண்ணுக்கு குடியுரிமையை வழங்கிய டிரம்ப்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இந்திய பெண்ணுக்கு குடியுரிமையை வழங்கிய டிரம்ப்

By: Karunakaran Thu, 27 Aug 2020 1:24:53 PM

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இந்திய பெண்ணுக்கு குடியுரிமையை வழங்கிய டிரம்ப்

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிபராக மீண்டும் ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுகின்றார். இந்நிலையில் இந்தியா, பொலிவியா, சூடான், கானா, லெபனான் போன்ற ஐந்து வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்க நாட்டின் குடியுரிமை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளை மாளிகையில் நடந்தது.

இந்த விழாவில் இந்தியாவை சேர்ந்த பெண் சாப்ட்வேர் இன்ஜீனியர் சுதா சுந்தரி நாராயணன் என்பவர் கலந்து கொண்டார். அப்போது அவர் ஜனாதிபதி டிரம்ப் முன்னிலையில் அந்நாட்டு குடிமகளாக உறுதியேற்றுக் கொண்டார். பின்னர், அவருக்கு அமெரிக்க குடியுரிமைக்கான சான்றிதழை டிரம்ப் வழங்கினார்.

trump,citizenship,indian woman,white house ,டிரம்ப், குடியுரிமை, இந்திய பெண், வெள்ளை மாளிகை

அமெரிக்க குடியுரிமைக்கான சான்றிதழை டிரம்ப் வழங்கிய இந்நிகழ்ச்சி அமெரிக்க வெள்ளை மாளிகை வரலாற்றில் இது ஒரு அரிய நிகழ்வாக கருதப்படுகிறது. இந்திய குடியுரிமை பெற்ற பெண் இன்ஜினியருக்கும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் குடியுரிமை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அதிபர் டிரம்ப், இந்திய பெண்மணி சுதா சுந்தரி நாராயணன் மிகவும் திறமையான சாப்ட்வேர் டெவலப்பர். அமெரிக்க குடியுரிமை பெற்ற நீங்கள், அமெரிக்க சட்டவிதிகளை பின்பற்ற வேண்டும் என்று அவரை கேட்டுக்கொண்டார்.

Tags :
|