Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் போலீஸ் துறையில் சீர்திருத்தத்தை கொண்டு வந்தார் டிரம்ப்

அமெரிக்காவில் போலீஸ் துறையில் சீர்திருத்தத்தை கொண்டு வந்தார் டிரம்ப்

By: Karunakaran Thu, 18 June 2020 2:13:25 PM

அமெரிக்காவில் போலீஸ் துறையில் சீர்திருத்தத்தை கொண்டு வந்தார் டிரம்ப்

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாயிட் என்ற கருப்பின வாலிபர் போலீசார் பிடியில் சிக்கி கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வாலிபரின் கழுத்தில் போலீஸ்காரர் ஒருவர் தனது கால் முட்டியால் அழுத்தியதன் காரணமாக அந்த வாலிபர் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு எதிராக அமெரிக்கா முழுதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேலும் இந்த போராட்டம் இனவெறிக்கு எதிரான ஆர்பாட்டமாக மாறியுள்ளது.

அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பா நாடுகளிலும் இனவெறிக்கு எதிரான போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் போலீசாருக்கு எதிரான போராட்டங்களால், பல மாகாணங்களில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதனால் போலீசார் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், போலீசாரை ஊக்குவிக்கும் வகையில், போலீஸ் துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும். அதற்கான நிர்வாக உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என்று கூறினார்.

us police,donald trump,america,reform ,அமெரிக்கா, டிரம்ப்,போலீஸ் துறை,சீர்திருத்தம்

இந்நிலையில் நேற்று அதிபர் டிரம்ப், போலீஸ் துறையில் சீர்திருத்தம் கொண்டு வந்து அதற்கான நிர்வாக உத்தரவை பிறப்பித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், போலீஸ் அதிகாரி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் தவிர வேறு எந்த சமயத்திலும் கைதாகும் நபரின் கழுத்தை நெறிப்பது தடை செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், போலீஸ் அதிகாரிகள் ஆபத்து குறைவான ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து எனது அரசாங்கம் கவனித்து வருகிறது எனவும், அதேசமயம் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்பும் மிகவும் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். கடந்த 2 வாரங்களுக்கு மேல் ஜார்ஜ் பிளாயிட் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டும், இனவெறிக்கு எதிராகவும் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :