Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பரவலுக்கு மத்தியில் பள்ளிக்கூடங்களை திறக்க ஆர்வம் காட்டும் டிரம்ப்!

கொரோனா பரவலுக்கு மத்தியில் பள்ளிக்கூடங்களை திறக்க ஆர்வம் காட்டும் டிரம்ப்!

By: Monisha Fri, 14 Aug 2020 07:06:25 AM

கொரோனா பரவலுக்கு மத்தியில் பள்ளிக்கூடங்களை திறக்க ஆர்வம் காட்டும் டிரம்ப்!

அமெரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் பள்ளிக்கூடங்களை திறக்க ஜனாதிபதி டிரம்ப் ஆர்வமாக இருக்கிறார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்து 69 ஆயிரமாக அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பில் உலக அளவில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது.

அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் 54,14,660 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்க நாட்டில் பள்ளிக்கூடங்களை திறப்பதில் ஆர்வம் காட்டுகிறார்.

usa,corona virus,vulnerability,schools,president trump ,அமெரிக்கா,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பள்ளிக்கூடங்கள்,ஜனாதிபதி டிரம்ப்

மாணவ, மாணவிகள் அணிந்து கொள்வதற்காக நாடு முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு 12½ கோடி முக கவசங்களை அனுப்பி வைப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, நோய் கட்டுப்பாடு மற்றம் தடுப்பு மையங்களில் இருந்து பள்ளிக்கூடங்களுக்கு நிபுணர் குழுக்களையும் அனுப்பி வைக்க தயார் எனவும் அவர் கூறி உள்ளார்.

பள்ளிக்கூடங்களை பாதுகாப்பாக திறப்பதற்காக இந்த நடவடிக்கையை தான் எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|